ஆந்திர மாநிலத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையம் அமைந்துள்ளது. இங்கிருந்து இன்று காலை 11.56 மணி அளவில் பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது. இது தொடர்பாக தற்போது இஸ்ரோ தலைவர் சோம்நாத் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, பிஎஸ்எல்வி சி 54 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டில் ஏவப்பட்ட அனைத்து செயற்கைக்கோள்களும் சுற்றுவட்ட பாதையில் திட்டமிட்டபடி நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பான எதிர்கால திட்டங்கள் நிறைய இருப்பதால், அதைப் பற்றி விரிவாக தற்போது கூற முடியாது. இந்நிலையில் ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 5 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இதில் 4 செயற்கைக்கோள்கள் தற்போது தயார் நிலையில் இருக்கிறது. மேலும் அனைத்து பணிகளும் முழுமையாக நிறைவடைந்த பிறகு ஜிஎஸ்எல்வி ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என்று கூறினார்.