சென்னை கே.கே நகரில் நடிகர் ஒய்.ஜி மகேந்திரன் மற்றும் மதுவந்திக்கு சொந்தமான #PSBB பள்ளி ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த பள்ளி நிர்வாகத்திற்கு எதிராக பலரும் சமூகவலைதளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் ஒய்.ஜி மகேந்திரன் இது குறித்து விளக்கமளித்துள்ளார். அதில், “PSBB பள்ளியை நானோ, என்னுடைய மகள் மதுவந்தியோ நிர்வாகம் செய்யவில்லை. நான் அந்த பள்ளியில் டிரஸ்டி மட்டும் தான். என்னுடைய தம்பி மற்றும் அவருடைய மனைவி தான் பள்ளியை வழிநடத்துகின்றனர். பாலியல் புகார் குறித்து கேள்விப்பட்ட உடன் டிரஸ்டி என்ற முறையில் உடனடியாக நடவடிக்கை எடுக்க நான் கோரிக்கை விடுத்தேன்” என்று தெரிவித்துள்ளார்.