Categories
சினிமா தமிழ் சினிமா

PS1: அந்த கேரக்டர்ல நீ நடிச்சிருக்கலாம்…… பிரபல நடிகரிடம் மனம் திறந்த பாரதிராஜா….!!!!!!

பிரபல நடிகரிடம் இயக்குனர் பாரதிராஜா பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இப்படத்தில் நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றது. மேலும் படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். தற்பொழுது படத்தின் பிரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடந்து வருகின்றது.

இந்த நிலையில் இத்திரைபடம் குறித்து பிரபல நடிகரிடம் மனம் திறந்து பேசி உள்ளார் பாரதிராஜா. அண்மையில் பாரத ராஜா உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சென்ற வாரம் பூரண குணமடைந்து வீடு திரும்பினார். இந்த நிலையில் அவரை பிரபல நடிகரான நெப்போலியன் நேரில் சென்று சந்தித்தார். இருவரும் நீண்ட நேரம் மனம் விட்டு பேசிய பொழுது பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து பாரதிராஜா பேசியுள்ளார். அவர் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பெரிய பழுவேட்டையராக நீதான் நடித்திருக்க வேண்டும். உன் உயரத்துக்கும் உன் உடல் வாகுக்கும் அந்த வேடத்திற்கு நீ பொருத்தமாக இருப்பாய் என சொல்லியதாக செய்தி பரவி வருகின்றது.

Categories

Tech |