Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1″ நம்ம லவ்வர இன்னொருத்தன் கல்யாணம் பண்ணி கூட்டிட்டு போன மாதிரி இருக்கு” பட விழாவில் நடிகர் பார்த்திபன்….!!!!

தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குனரான மணிரத்தினம் தற்போது பொன்னியின் செல்வன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை தழுவி எடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ரகுமான், பார்த்திபன், சரத்குமார், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இப்படம் வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் பட குழுவினர் தற்போது பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், நாளை படம் ரிலீஸ் ஆவதை முன்னிட்டு இன்று நிருபர்களை சந்தித்து பேசினர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் பார்த்திபன் பேசியதாவது, என்னை நிருபர் சந்திப்புக்கு அழைத்த போது நான் முதலில் வரவில்லை என்று தான் கூறினேன்.

ஏனெனில் தஞ்சாவூருக்கு சென்று படத்தை பார்ப்பதற்கு திட்டமிட்டு இருந்தேன். அங்கு படம் பார்த்து முடித்த பிறகு ராஜராஜ சோழனுக்கு மரியாதை செலுத்த இருக்கிறேன். இந்த காரணத்தினால் தான் வர முடியாது என்று கூறினேன். ஆனால் இந்த நிகழ்ச்சியை தவற விடக்கூடாது என்பதற்காக நானே வருவேன்னு சொல்லி அடம்பிடித்து வந்திருக்கிறேன். இதுபோன்ற பிரம்மாண்ட மேடையை இன்னும் எத்தனை படங்களில் பார்க்க முடியும் என்று தெரியவில்லை. நம்ம லவ் பண்ண பொண்ண இன்னொருத்தன் தாலி கட்டி கூட்டிட்டு போனா எப்படி இருக்கும் அப்படி இருக்கும். இப்படி நம்ம ரொம்ப நாளா காதலித்த படம் நாளைக்கு ரசிகர்கள் கிட்ட போகுது நினைக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. ஆனா ஒரு பக்கம் வருத்தமாகவும் இருக்கு என்று கூறினார்.

Categories

Tech |