Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” நடிகை திரிஷா எடுத்த திடீர் அதிரடி முடிவு…. அதிர்ச்சியில் தயாரிப்பாளர்கள்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராமன், திரிஷா மற்றும் ஐஸ்வர்யா ராய், சோபிதா துலிப்பாலா உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோஷன் வேலைகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஹைதராபாத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பட குழுவினர் அனைவரும் தவறாது கலந்து கொள்கின்றனர். அந்த பிரமோஷன் நிகழ்ச்சிகளின் போது எடுக்கப்படும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் பொன்னியின் செல்வன் திரைப்படத்திற்கு பிறகு நடிகை திரிஷா தன்னுடைய சம்பளத்தை அதிரடியாக உயர்த்தியுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி அடுத்த படத்திற்கு ரூபாய் 2 கோடி வரை சம்பளத்தை உயர்த்தியதாக கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் மிகுந்த அதிர்ச்சியில் இருப்பதாக கூறப்படுகிறது.

Categories

Tech |