ஜெயம் ரவி நடித்த அருண்மொழிவர்மன் கதாபாத்திரம் குறித்து பார்க்கலாம்.
மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். இத்திரைப்படத்தின் முதல் பாகம் வருகின்ற செப்டம்பர் 30ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இதனால் இத்திரைப்படத்திற்காக பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றார்கள்.
மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கின்றார். தற்போது படத்தின் பிரமோஷன் பணிகள் விருவிருப்பாக நடந்து வருகின்றது. இந்த நிலையில் இத்திரைப்படத்தில் அருள் மொழி வர்மன் கதாபாத்திரம் குறித்த செய்தி வெளியாகி இருக்கின்றது. அது என்னவென்றால் அருண்மொழிவர்மன் என்ற பேரரசர் மிகவும் அமைதியானவர். உதவும் தன்மை கொண்டவர். யார் மனதும் புண்படக் கூடாது என எண்ணபவர். இவர் மிருகங்களிடம் பேசும் திறன் கொண்டவர். மிருகங்கள் நினைப்பதை புரிந்து கொண்டு அதன் மீது பாசமும் கொண்டவர். எதிரி நம் நாட்டினராக இருந்தாலும் அவருடன் நட்புடன் இருக்க வேண்டும் என எண்ணுபவர். இவ்வளவு சிறப்பு மிக்க கதாபாத்திரத்தில் ஜெயம் ரவி நடித்துள்ளார் குறிப்பிடத்தக்கது.