Categories
சினிமா தமிழ் சினிமா

“PS-1” எழுதி வச்சுக்கோங்க…. கண்டிப்பாக படம் சூப்பர் ஹிட் ஆகும்…. நடிகர் விக்ரமின் ஸ்பீச்சால் கவர்ந்த ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக வலம் வரும் மணிரத்தினம் கல்கியின் புகழ் பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 2 பாகங்களாக இயக்கியுள்ளார். இதன் முதல் பாகம் தயாராகி வருகிற செப்டம்பர் 30-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் நடிகர்கள் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஜெயராமன், ரகுமான், சரத்குமார், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, ஏஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். இந்நிலையில் படக்குழுவினர் தற்போது பிரமோஷன் வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.‌ அந்த வகையில் நடிகர் விக்ரம் பிரமோஷன் நிகழ்ச்சியின் போது பேசிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில் தஞ்சை பெரிய கோவில் மற்றும் கலாச்சாரம் பற்றி ஆங்கிலத்தில் அழகாக பேசி இருப்பார். இந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில் வீடியோவை பார்த்தவர்கள் சில கருத்துக்களை கூறியுள்ளனர். அதாவது நடிகர் விக்ரமுக்கு பல விஷயங்கள் தெரிந்திருக்கிறது. இதுவரை வெளியான பட விளம்பர வீடியோக்களில் இதுதான் மிகச் சிறந்த வீடியோ. எழுதி வச்சுக்கோங்க. கண்டிப்பாக இதுக்காகவாது படம் ஹிட் ஆகும். நாங்கள் படத்திற்கான டிக்கெட் வாங்கப் போகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் நடிகர் விக்ரம் பொன்னியின் செல்வன் படத்தை பற்றி கூறாமல் தஞ்சை பெரிய கோவிலை பற்றி கூறி ரசிகர்களின் மனதை பெரிய அளவில் கவர்ந்து விட்டார்.

Categories

Tech |