Categories
கிரிக்கெட் விளையாட்டு

“கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம்” ஜாம்பவான் சச்சின்..!!

கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம் என்று கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் சுதந்திர தின வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். 

இந்தியா முழுவதும் இன்று  73-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இன்றைய இனிய சுதந்திர தின நாளில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மத்திய மாநில அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Image result for Proud of what we've achieved in the last 72 years sachin .

அந்த வகையில் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அனைத்து இந்தியர்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்! கடந்த 72 ஆண்டுகளில் நாம் அடைந்ததைப் பற்றி பெருமிதம் கொள்கிறோம். ஆரம்பகால குழந்தை பருவ வளர்ச்சியில் நாம் அனைவரும் முதலீடு செய்வோம் .. இது நம் தேசத்தை ஆரோக்கியமாகவும், செல்வந்தர்களாகவும், அடுத்த தலைமுறைகளுக்கு மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க முடியும்.

 

Categories

Tech |