கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து நடேச தமிழார்வன் படுகொலையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம் நடத்தியுள்ளனர். இந்த போராட்டமானது செயலாளரான சக்கணன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது.
மேலும் இந்த போராட்டத்தில் நிர்வாகிகளான காதர் முகைதீன், சமுத்திரம், பாண்டியன், பழனிக்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து சேத்தூர் பேருந்து நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சியினர் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இந்த போராட்டமானது நகர செயலாளரான ராஜா முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட செயலாளர், முன்னாள் எம்.எல்.ஏ. வான ராமசாமி, துணைச் செயலாளர்கள், யூனியன் கவுன்சிலர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.