Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

நீங்க எதுவுமே சரியா செய்யல… கோபத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட பணிகள்… பொதுமக்களின் போராட்டத்தால் பரபரப்பு…!!

முறையாக கட்டப்படாத சாக்கடை கால்வாய் பணிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து  பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி சார்பில் போயம்பாளையம் பகுதியில் இருக்கும் ராஜா நகர் ஐந்தாவது வீதியில் சாக்கடை கால்வாய் கட்டும் பணியானது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கு வீதியின் இருபுறமும் கட்டப்பட்டு வரும் சாக்கடை கால்வாயில் சென்ட்ரிங் இல்லாமலும், சில இடங்கள் அகலம் குறைவாகவும் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கான பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போயம்பாளையம் கிளை செயலாளர் சசிகுமாரின் தலைமையில் பொதுமக்கள் அந்த பணிகளை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பொதுமக்கள் சில இடங்களில் அகலம் குறைவாக இருப்பதோடு, சாக்கடை கால்வாயானது தனியார் இடத்திற்குள் வருவதாக வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து முறையாக அளந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Categories

Tech |