இலங்கையில் 1000-த்திற்கும் அதிகமான பௌத்தத் துறவிகள் கொழும்பு நகரில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து நேற்று பேரணி நடத்தியிருக்கிறார்கள்.
இலங்கையில் நிதி நெருக்கடி காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் நாட்டில் இடைக்கால ஆட்சி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து ஆயிரத்திற்கும் அதிகமான பௌத்த துறவிகள் சிறீசுமன என்ற மூத்த துறவியின் தலைமையில் பேரணி நடத்தியிருக்கிறார்கள்.
இதுபற்றி அவர் தெரிவித்ததாவது, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்து, ஒரு வருடத்திற்கு அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய இடைக்கால ஆட்சியை அமைப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.
அந்த அரசை தற்போது சிறப்பு குழு நிர்வகிக்க வேண்டும். இலங்கை அரசாங்கத்திடமிருந்து இதற்கு தகுந்த பதில் கிடைக்கவில்லை எனில் பொதுமக்களுடன் இணைந்து ஆர்ப்பாட்டத்தை அதிகப்படுத்துவோம் என்று கூறியிருக்கிறார். இதற்கு முன்பாக அதிபர் கோட்டபாய ராஜபக்சேவிற்கு சிறீசுமன கடிதம் அனுப்பியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.