ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தினர் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது.
விருதுநகர் மாவட்டத்திலுள்ள ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாரத்கிசான் சங்கத்தின் சார்பில் போராட்டமானது நடைபெற்றுள்ளது. இந்தப் போராட்டத்தில் விவசாய விளைபொருட்களுக்கு லாபகரமான விலையை நிர்ணயமிக்க வேண்டும் என அரசிற்கு வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை அடுத்து இந்த போராட்டத்தை மாவட்ட செயலாளரான காளியப்பன் என்பவரின் முன்னிலையில் நடைபெற்றுள்ளது. மேலும் இந்த போராட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என பலரும் கலந்து கொண்டனர். அதன் பிறகு இறுதியில் தங்களின் கோரிக்கைகளை மனுவாக எழுதி பிரதமருக்கு அனுப்பி வைக்க சங்கத்தின் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.