காங்கிரஸ் கட்சியினர் பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள கோட்டைவாசல்படி கிராமத்தில் காங்கிரஸ் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்துள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அவர்கள் வலியுறுத்திய கோரிக்கைகளாவது விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை எக்காரணத்தைக் கொண்டும் இகழக்கூடாது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் அமைத்து ராஜா தலைமை தாங்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சியினர் பலர் கலந்துகொண்டுள்ளனர்.