தாய்லாந்து நாட்டில் மது போதையில் இருந்த பெண் பாலியல் தொழிலாளி, ஒரு சுற்றுலா பயணியின் காதை கடித்து தின்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
தாய்லாந்தில் கன்னிகா என்ற பாலியல் தொழிலாளி மது போதையில் இருந்திருக்கிறார். அப்போது 55 வயதுடைய ஒரு நபரிடம் பேச சென்றிருக்கிறார். அந்த சமயத்தில் அவருக்கு போதை தலைக்கு ஏறியதால் செய்வதறியாது இருந்தவர் திடீரென்று அந்த நபரின் காதை கடித்தார். அதன்பிறகு, அதனை மென்று முழுங்கினார்.
வலியால் கதறிய அந்த முதியவரை, அங்கு சென்ற காவல்துறையினர் மருத்துவமனையில் சேர்த்தனர். அந்த பெண்ணை உடனடியாக கைது செய்தனர். மேலும் தன்னை கைது செய்து வந்த காவல்துறையினரையும் அந்த பெண் தாக்கியதாக கூறப்பட்டிருக்கிறது.