Categories
உலக செய்திகள்

“போருக்காக தோண்டப்பட்ட பதுங்கு குழியில் செழிப்பான விவசாயம்”….. எப்படில்லாம் யோசிக்கிறாங்க பாருங்க….!!!!!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள கிளப்ஹாம் பகுதியில் இரண்டாம் உலகப்போரின் போது பதுங்கு குழியானது அமைக்கப்பட்டது. இந்த பதுங்கு குழியில் தற்போது விவசாய பண்ணை அமைக்கப்பட்டு செழிப்பான முறையில் விவசாயம் நடைபெற்று வருகிறது. இங்கு மூலிகைகள், முளைகட்டிய பச்சை பட்டாணி மற்றும் கீரை வகைகள் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் விவசாயம் செய்யப்படுகிறது. இந்நிலையில் விவசாய பண்ணை அமைந்துள்ள சுரங்கமானது 30 கிலோமீட்டர் நீளத்தில் அமைந்துள்ள நிலையில் தொழில்நுட்பத்தின் உதவியுடன் விவசாயமானது நடைபெறுகிறது.

இதனையடுத்து காலநிலை மாற்றம், உணவு பற்றாக்குறை போன்ற பல்வேறு நெருக்கடியான சூழ்நிலைகளுக்கு மத்தியில் பதுங்கு குழியில் விவசாயம் செய்வது மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். மேலும் இயற்கையான முறையில் விவசாயம் நடைபெறாமல், செயற்கை வெளிச்சத்தை பயன்படுத்தி விவசாயம் நடைபெறுவதால் கூடுதல் எரிசக்தி தேவைப்படுகிறது. இருப்பினும் இயற்கை விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் தண்ணீரை விட 70 முதல் 90 சதவீதம் அளவுக்கு நீர் குறைவாக பயன்படுத்தப்படுவதுடன், 95 சதவீதம் அளவுக்கு குறைந்த அளவு பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்படுகிறது.

Categories

Tech |