ராமநாதபுரம் மாவட்டத்தில் தி.மு.க அரசை கண்டித்து அதிமுக நிர்வாகிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சத்திரக்குடி பகுதியில் அதிமுக கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற திமுக அரசு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என அதிமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர். இதனையடுத்து ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்.எல்.ஏவும், அனைத்துல எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான டாக்டர் முத்தையா தலைமை தங்கியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பாஸ்கரன், போகலூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் லோகிதாசன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சுரேஷ், ஒன்றிய மாணவரணி செயலாளர் சரவணன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் ஜெகதீஸ்வரன்,ஒன்றிய மகளிரணி செயலாளர் அனிதா முருகேசன், நகர் செயலாளர் கோவிந்தன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். மேலும் ஒன்றிய இணை செயலாளர் கற்பகவல்லி, ஒன்றிய கவுன்சிலர் காளீஸ்வரி விஜயகுமார், போகலூர் ஊராட்சி மன்ற தலைவர் கலையரசி, ஐ.டி. பிரிவு செயலாளர் அனித் மோகன்ராஜ் உட்பட கட்சி நிர்வாகிகள் பலரும் பங்கேற்றுள்ளனர்.