ஆத்தூர் அருகே கள்ளச்சாராயம் விற்பனை செய்த 2 பேரை மதுவிலக்கு போலீசார் கைதுசெய்தனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகில் மணிவிழுந்தான் பகுதியில், கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக ஆத்தூர் மதுவிலக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.. இதையடுத்து, நேற்று முன்தினம் இரவு அந்தபகுதியில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் மணிவிழுந்தான் கிராமத்திலிருந்து தலைவாசல் ஆத்தூர் செல்லும் சாலை பகுதியிலும் மதுவிலக்கு போலீசார் வாகன தணிக்கை செய்தனர்.
அப்போது, மணிவிழுந்தான் கிராமத்துக்கு வெளியே புதர் பகுதியை ஒட்டி பைக்கில் இருவர் நின்றிருந்ததால் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.. விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணாக பதில் சொன்னதால் சந்தேகமடைந்த போலீசார் அவர்கள் வைத்திருந்த பைக்கை சோதனை செய்தனர்.. சோதனையில், பைக்கில் மறைத்துவைத்திருந்த சாராய பாக்கெட்டுகளைக் கைப்பற்றி, இருவரையும் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில்,சாத்தப்பாடி பகுதியைச் சேர்ந்த 21 வயது திலீபன், ராமசேஷபுரத்தைச் சேர்ந்த 28 வயது பிரசாந்த் என்பது தெரியவந்தது.. அதன்பின் போலீசார், அவர்களிடமிருந்து கள்ளச்சாராய விற்பனைக்கு பயன்படுத்திய பைக்கை பறிமுதல்செய்து, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.