தமிழ்நாட்டில் உள்ள கோவில் நடைமுறைகளில் சென்னை உயர்நீதிமன்றம் அரசை பாராட்டியுள்ளது. இது குறித்து உயர் நீதிமன்றம் கூறியதாவது, திருப்பதியில் இருக்கும் நடைமுறைகளை போன்ற தமிழ்நாட்டில் உள்ள கோவில்களிலும் கொண்டு வர வேண்டும். தமிழகத்தில் உள்ள கோவில் வளாகங்களில் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கூடாது.
அதன்பிறகு கோவில்களில் இருக்கும் தேவையில்லாத நடைமுறைகள் அனைத்தையும் ஒழிக்க வேண்டும். இதனையடுத்து கோவில்களுக்கு வெளியே மட்டும் யாகங்கள் நடத்துவதற்கு அனுமதி கொடுக்கும் வகையில் இந்து அறநிலையத்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் கோவில் செயல்பாடுகளில் தமிழக அரசின் நடவடிக்கைகள் பாராட்த்தக்கதாகும் என்றும் நீதிமன்றம் கூறியுள்ளது.