திமுக பொதுச் செயலாளர் அன்பழகனின் மறைவு திமுகவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகன் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் அதிகாலை 1 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் திமுகவினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அன்பழகனின் நினைவை போற்றும் வகையில் திமுக சார்பில் நடைபெற இருந்த அனைத்து நிகழ்ச்சிகளும் 7 நாட்களுக்கு ரத்து செய்யப்படுவதாகவும் , திமுகவின் கொடிகள் ஒருவாரத்திற்கு அரைக்கம்பத்தில் பறக்க விடப்படுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அறிக்கை வெளியிடுள்ளார்.