Categories
சினிமா தமிழ் சினிமா

“தயாரிப்பு, நடிப்பு”….. கமல் சொன்ன திடீர் டுவிஸ்ட்….. ஷாக்கில் உதயநிதி…. அவரே பகிர்ந்த சுவாரஸ்ய தகவல்…..!!!!!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான உதயநிதி அதன் பின் மனிதன், நிமிர், சைக்கோ போன்ற பல தரமான படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார். உதயநிதி படங்களில் நடிப்பது மட்டுமின்றி தயாரிப்பது மற்றும் படங்களை விநியோகம் செய்வது போன்றவற்றிலும் ஈடுபட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான குருவி என்ற திரைப்படத்தின் மூலம் தான் முதன்முதலாக தயாரிப்பாளராக உதயநிதி அறிமுகமானார்.

அதன் பிறகு பல வெற்றி படங்களை தயாரித்தும் உள்ளார். அதன் பிறகு கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படத்தை உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் விநியோகம் செய்த நிலையில், அப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இதன் காரணமாக அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களை தமிழகத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் சார்பில் உதயநிதி வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் நடிகர் அஜித்தின் துணிவு திரைப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் கமல்ஹாசன் தயாரிப்பில் ஒரு புதிய படத்தில் நடிக்கிறார். இது குறித்து உதயநிதி கூறியதாவது, என்னை ஒருமுறை கமல்ஹாசன் அழைத்தார். அவர் என்னிடம் ஒரு கதையை கூறி இந்த படத்தை நான் பண்ண போவதாக தெரிவித்தார்.

நான் இந்த படத்தை தயாரிக்கிறேன் என்று கூறினேன். ஆனால் கமல்ஹாசன் நான் படத்தை தயாரிக்கிறேன். நீங்கள் படத்தில் நடிங்கள் என்று கூறிவிட்டார்.‌ அதைக் கேட்டவுடன் நான் மிகவும் அதிர்ச்சியாகி விட்டேன். கமல்ஹாசன் தொடர்ந்து வற்புறுத்தியதன் காரணமாக படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் என்று கூறியுள்ளார். மேலும் உதயநிதி தற்போது மாமன்னன் மற்றும் கலகத் தலைவன் போன்ற படங்களில் தற்போது நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |