பதினெட்டு வருட திருமண வாழ்க்கையை முறித்து கொண்ட நடிகர் தனுஷை பிரபல தயாரிப்பாளர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
நடிகர் தனுஷ் தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத அளவிற்கு முன்னணி நடிகராக உயர்ந்திருக்கிறார். தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து தனக்கென்று தனி இடத்தை பிடித்திருக்கிறார். இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.
இந்நிலையில், தனுஷ், தன் மனைவி ஐஸ்வர்யா ரஜினிகாந்தை விவாகரத்து செய்வதாக அறிவித்தார். இதனைத்தொடர்ந்து அவரை பற்றி பல கிசுகிசுக்கள் வந்து கொண்டிருக்கிறது. பல நடிகைகளுடன் அவர் தொடர்பில் இருந்ததாகவும், இணையதளங்களில் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.
தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதிக்கு யாத்ரா, லிங்கா ஆகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். எனவே, திரையுலகப் பிரபலங்கள், இருவரும் தங்கள் முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறிவருகிறார்கள். இந்நிலையில், கே.ராஜன் என்ற பிரபல தயாரிப்பாளர், நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா விவாகரத்து தொடர்பில் கருத்து கூறியிருக்கிறார்.
இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது, காதல் திருமணம் செய்த நடிகர் தனுஷ் 18 வருடங்களுக்கு பின், இவ்வாறு ஒரு முடிவை எடுத்திருக்கக் கூடாது. எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவர்களின் பிள்ளைகளுக்காக விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும் என்றார். மேலும், தனுஷின் இந்த முடிவு அவரின் திரையுலக வாழ்க்கைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் தெரிவித்துள்ளார்.
சொந்த வாழ்க்கையிலேயே சரியாக இருக்க முடியாத தனுஷ் திரையுலகில் எவ்வாறு ஹீரோவாக வெல்ல முடியும்? நடிகர்களின் வாழ்க்கை முறையைத்தான் அவர்களின் ரசிகர்களும் பின்பற்றுவார்கள். தனுஷ் குறித்து பல வதந்திகள் வந்தாலும், அவர் தன் பொறுப்பை விட்டு வெளியேறுவது சரி கிடையாது என்று கூறியிருக்கிறார்.
மேலும், பாக்கியராஜ் மற்றும் பூர்ணிமா, நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா போன்ற பல திரையுலக நட்சத்திரங்கள் நன்றாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அவ்வாறு இருக்கும்போது தனுஷின் இந்த முடிவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். மேலும், வினை விதைத்தவன் வினை அறுப்பான். உப்பு தின்றால், தண்ணீர் குடித்தே ஆக வேண்டும் என்றும் தனுஷை கடுமையாக சாடியுள்ளார்.
இது மட்டுமல்லாமல், தமிழ் திரையுலகில் தனுஷ் இந்த உயரத்திற்கு வருவதற்கு ரஜினிகாந்தின் மருமகன் என்பதும் முக்கிய காரணம். அதனை தூக்கி எறிய துணிந்த தனுஷுக்கு திரையுலக வாழ்க்கை நிச்சயம் கேள்விக்குறியாக மாறும் என்று கூறியிருக்கிறார்.