Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

19% ஈரப்பதமுள்ள நெல் கொள்முதல் – மத்திய அரசு முடிவு

நெல் ஈரப்பதம் அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக ஒன்றிய அரசிடம் தமிழ்நாடு அரசு அனுமதி கோரி இருந்த நிலையில் 19% வரை நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்வதற்கான ஈரப்பத  அளவை 22 சதவீதமாக உயர்த்துவதற்காக தமிழக அரசு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டிருந்தது. இதில் தற்போது 19% வரை ஈரப்பத  நெல்கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடப்பு கொள்முதல் சீசன் துவங்க இருக்கக்கூடிய நிலையில் 17 சதவீதம் வரை ஈரப்பதம் உள்ள நெல்லை கொள்முதல்  செய்ய ஒன்றிய அரசு அனுமதி அளித்திருந்தது.

தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் இம்மாதம் நல்ல மழை பெய்ய தொடங்கி இருப்பது காரணமாக நெல்லின்  ஈரப்பதம் அளவை அதிகரித்து தரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்தார்கள். அதன் அடிப்படையில் தான் 22 சதவீதம் வரை ஈரப்பதமான நெல்லை கொள்முதல் செய்வதற்கு ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு தமிழக அரசு கடிதம் எழுதி இருந்தது.

இது தொடர்பாக கூட உணவு கழக தர கட்டுப்பாட்டு பிரிவினுடைய துணை இயக்குனர் தலைமையிலான குழு டெல்டா மாவட்டங்களில் நெல் மாதிரிகளை ஆய்வு செய்தார்கள். அந்த ஆய்வின் பரிசோதனை அடிப்படையில்,  ஒன்றிய அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் தான் தற்பொழுது 19% வரை நெல் கொள்முதல் செய்வதற்கு ஒப்புதல் வழங்கப்படுவதற்கான ஆவணத்தில் மத்திய அமைச்சர் கையொப்பம் இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |