காஷ்மீர் மற்றொரு பாலஸ்தீனம் எனும் தலைப்பில் ரஷ்ய நாட்டைச் சேர்ந்த ஒரு ஊடகம் ஆவணப்படம் வெளியிட்டதால் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
ரஷ்ய நாட்டின் ஒரு ஊடகம், “காஷ்மீர்:” மற்றொரு பாலஸ்தீனமாக உருவாகிக் கொண்டிருக்கிறது என்னும் தலைப்பில் ஆவணப்படத்தை தயாரித்திருக்கிறது. இந்த ஆவணப்படத்தினுடைய முன்னோட்டம் சமீபத்தில் வெளியாகியிருக்கிறது. இது தான் தற்போது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
இது தொடர்பில் இந்திய நாட்டில் இருக்கும் ரஷ்ய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் காஷ்மீர் பிரச்சனையானது, இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே ஆனது. இந்த இரண்டு நாடுகளும் தான் அந்த விவகாரம் தொடர்பில் முடிவெடுக்க வேண்டும். இந்த பிரச்சனையில் தலையிடக்கூடாது என்பது தான் ரஷ்ய நாட்டின் கொள்கை அடிப்படையிலான நிலைப்பாடு.
இதில் எந்தவித மாற்றங்களும் கிடையாது. காஷ்மீர் குறித்த இந்த ஆவணப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டிருக்கும் அந்த ஊடகம் ரஷ்ய அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவதாக தவறாக குறிப்பிட்டிருக்கிறது. அதனால் மட்டும் அந்த ஊடகத்திற்கு அரசாங்கத்தின் ஆதரவு இருக்கிறது என்பது அர்த்தமில்லை என்று தெரிவித்திருக்கிறது.