Categories
உலக செய்திகள்

சீன ஒலிம்பிக் போட்டியில் பிரச்சனை…. ஊடகங்கள் கண்டனம்…. என்ன காரணம்…?

சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நேரலையில் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்த ஒரு செய்தியாளரை காவல் துறையினர் தள்ளிவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சீனாவின் தலைநகரான பெய்ஜிங் மாகாணத்தில், இந்த வருடத்திற்கான குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது. இதில் பல நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டுள்ளதால் பல நாட்டு ஊடகங்களும் அங்கு முகாமிட்டிருக்கிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பாக நெதர்லாந்து நாட்டின் பத்திரிகையாளரான ஜோர்ட் டென் தாஸ் என்பவர் நேரலையில் தகவல் வெளியிட்டு கொண்டிருந்தார்.

அப்போது அவரை காவல்துறையினர் தள்ளிவிட்டுள்ளனர். உடனே, அவர் தான் பத்திரிக்கையாளர் என்றும், நேரலையில் தகவல் வெளியிட்டு கொண்டிருக்கிறேன் என்றும்  கூறியிருக்கிறார். எனினும், காவல்துறையினர் அவரை தள்ளிவிட்டிருக்கிறார்கள்.

மேலும், அவரின் கேமராவில் கை வைத்து காவல்துறையினர் மறைத்திருக்கிறார்கள். இதனை, நேரலையில் பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் அதிர்ச்சியடைந்தார். அதனைத்தொடர்ந்து, அந்த பத்திரிக்கையாளர் வேறு இடத்திற்கு சென்று மீண்டும் நேரலையில் தகவல் வெளியிட்டுள்ளார்.  தற்போது காவல்துறையினருக்கு ஊடகங்கள் சார்பாக எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

மேலும், அந்த செய்தி நிறுவனமானது, ட்விட்டர் பக்கத்தில், அந்த பத்திரிகையாளர் நலமாக இருக்கிறார். ஆனால் சீனாவில் பத்திரிக்கையாளர்களின் நிலைமை இதுதான் என்று கூறியிருக்கிறது. ஆனால், ஒலிம்பிக் கமிட்டியானது அந்த பத்திரிகையாளருக்கு நடந்தது  உண்மை கிடையாது என்றும் அந்த நிகழ்வு வேறு எங்கோ நடந்தது என்றும் விளக்கம் தெரிவித்திருக்கிறது. இது மட்டுமல்லாமல் பிற நாட்டு செய்தியாளர்கள் செய்தி சேகரிப்பதில் எந்தவித தடையும் இல்லை என்றும் கூறியிருக்கிறது.

Categories

Tech |