சுவிட்சர்லாந்தில் சமீப நாட்களாக அத்தியாவசிய பொருட்களின் விலை வெகுவாக அதிகரித்திருக்கிறது.
சுவிட்சர்லாந்தில் கடந்த 2020-ம் வருட தொடக்கத்தில் கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ஏற்பட்ட நிலையற்ற தன்மையை தொடர்ந்து பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்பட்டது. மேலும், பணவீக்கமும் உண்டானது. இது மட்டுமன்றி ரஷ்யா, உக்ரைன் நாட்டில் ஊடுருவிய காரணத்தால் அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரித்தது.
எனவே, மீண்டும் பணவீக்கம் அதிகரித்து தற்போது பொருட்களை விலை வெகுவாக உயர்ந்துள்ளது. பெட்ரோல், டீசல், இயற்கை எரிவாயு மற்றும் வெப்பம் உண்டாக்குவதற்கு பயன்படுத்தப்படும் எண்ணெய் போன்றவற்றின் விலை கடுமையாக அதிகரித்திருக்கிறது.