கணவன் மனைவிக்கு இடையே நடந்த தகராறில் கையில் வைத்திருந்த செல்போனால் தாக்கியதில் மனைவியின் கண்பார்வை பறிபோனது
சென்னை மாவட்டத்திலுள்ள தாங்கல் உள்வாயல் தெருவில் லோகேஸ்வரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சித்ரா என்ற மனைவி உள்ளார். இத்தம்பதிகள் கடந்த 2016-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் லோகேஸ்வரன் மதுபோதையில் மனைவியிடம் வரதட்சணை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். மேலும் லோகேஸ்வரனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருப்பது சித்ராவிற்கு தெரியவருகிறது.
இவ்விவகாரம் தொடர்பாக கடந்த மாதம் 25-ம்தேதி சித்ரா அவரது கணவரிடம் கேட்டபோது இருவருக்குமிடையில் தகராறு ஏற்பட்டது. இதில் மிகவும் கோபமடைந்த லோகேஸ்வரன் அவரது கையில் வைத்திருந்த செல்போனை மனைவியின் முகத்தை நோக்கி வீசினார். இதனைஅடுத்து வீசப்பட்ட அந்த செல்போன் அவரது இடது கண்ணில் பட்டது. இதனால் படுகாயமடைந்த சித்ராவை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சித்ராவின் கண்ணை பரிசோதித்துப் பார்த்ததில் அவரது இடது கண் பார்வை பறி போனது தெரியவந்ததுள்ளது. இந்நிலையில் சித்ரா கொடுத்த புகாரின் பேரில், வடபழனி அனைத்து மகளிர் போலீசார் லோகேஷ்வரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.