பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனை பழிவாங்க அனைத்து ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் ஒன்றிணைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு அவருக்கு ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.
பிரிட்டன், தங்களுக்குரிய ஜெர்ஸி தீவில் பிரான்ஸின் அனைத்து மீன்பிடி படகுகளையும் அனுமதிக்கவில்லை. இதனால், கோபமடைந்த பிரான்ஸ், தங்கள் மீன்பிடி படகுகளுக்கு அனுமதி தரவில்லை எனில், ஜெர்ஸி தீவிற்கு செல்லும் மின்சாரத்தை நிறுத்திவிடுவோம் என்று மிரட்டல் விடுத்தது.
மேலும், ஐரோப்பிய ஒன்றியத்திடம், பிரிட்டனை பழிவாங்க பல நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு கோரியது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியம் அதனை ஏற்க மறுத்து, எதற்கெடுத்தாலும் பிரிட்டனை மிரட்ட தேவையில்லை. சரியான நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.
எனவே, பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரோன், பிரிட்டனுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டார். ஆனால், அந்த அறிக்கைக்கு ஸ்பெயின், இத்தாலி மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அதாவது கடந்த வாரம் பிரான்ஸ், பிரெக்சிட் ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறி பிரிட்டன் செயல்படுவதாக அறிக்கை ஒன்றை பிற ஐரோப்பிய நாடுகளுக்கு அனுப்பியது.
ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற நாடுகள், பிரான்ஸின் இந்த கோரிக்கையை ஏற்கவில்லை. இரண்டு நாடுகளுக்கும் ஏற்ற ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டது.