8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்றிரவு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி அபார வெற்றி பெற்றது.
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்றிரவு 8.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா மற்றும் தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
விறுவிறுப்பாக நடந்த ஆட்டத்தில் இறுதியில் 33-39 என்ற கணக்கில் தமிழ் தலைவாஸ் அணி வெற்றி பெற்றது. இதன்மூலம் 6 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி 2 வெற்றியுடன் புள்ளி பட்டியலில் 5-வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.