8-வது புரோ கபடி லீக் போட்டியில் இன்று இரவு 2 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது . இதில் நேற்று நடந்த புனே – பாட்னா அணிகளுக்கிடையேயான ஆட்டத்தில் 38-26 என்ற கணக்கில் பாட்னா அணி வெற்றி பெற்றது .அதேபோல் மற்றொரு போட்டியில் யுபி யோதா அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் வெற்றி பெற்றது . இந்நிலையில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன.
இதில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் பெங்கால் – டபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன . அதே போல் நடப்பு சீசனில் ஒரு தோல்வியைக் கூட சந்திக்காமல் டெல்லி அணி பலம் வாய்ந்த அணியாக உள்ளது .இதையடுத்து இரவு 8.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் குஜராத் – யுபி யோதா அணிகள் மோதுகின்றன.