8-வது புரோ கபடி லீக் போட்டியில் நேற்று ஒரே நாளில் நடந்த 3 ஆட்டங்களும் சமனில் முடிந்துள்ளது .
12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் யு மும்பா- உ.பி.யோத்தா அணிகள் மோதின .இதில் முதல் பாதி ஆட்டத்தில் 16-13 என்ற கணக்கில் மும்பை அணி முன்னிலையில் இருந்தது .இதன் பிறகு நடந்த பிற்பாதி ஆட்டத்தில் சரிவில் இருந்து மீண்டு உ.பி.யோத்தா அணி 24-24 என்ற கணக்கில் சம நிலைக்கு கொண்டு வந்தது .
இறுதியாக 28-28 என்ற கணக்கில் போட்டி சமனில் முடிந்தது. இதைத் தொடர்ந்து நடந்த மற்றொரு போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின ஆட்டம் 34-34 என்ற கணக்கில் சமனில் முடிந்தது .இதையடுத்து 9.30 மணிக்கு நடந்த ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- தபாங் டெல்லி அணிகள் மோதின .இந்த ஆட்டமும் 30-30 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இதனால் நேற்று நடந்த 3 லீக் ஆட்டங்களுக்கும் சமனில் முடிந்துள்ளது.