Categories
விளையாட்டு

புரோ கபடி லீக் :2-வது வெற்றியை பெறுமா தமிழ் தலைவாஸ்….? உ.பி.யுடன் நாளை மோதல் ….!!!

8-வது புரோ கபடி லீக் போட்டியில் நாளை நடைபெறும் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி,உ.பி. யோதா அணியுடன் மோதுகின்றது .

12 அணிகள் பங்கேற்கும் 8-வது புரோ கபடி போட்டி பெங்களூரில் நடைபெற்று வருகிறது. இதுவரை  5 போட்டிகளில் விளையாடியுள்ள தமிழ் தலைவாஸ் அணி ஒரு வெற்றி ,ஒரு தோல்வி , 2 டிரா என 14 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது .இந்நிலையில் தமிழ் தலைவாஸ் அணி தனது  6-வது ஆட்டத்தில் உ.பி. யோதா அணியுடன் நாளை மோதுகின்றது.இப்போட்டி நாளை இரவு 8.30 மணிக்கு நடைபெறுகிறது .

இதனால் தமிழ் தலைவாஸ் அணி 2-வது வெற்றியை கைப்பற்றுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர் .இதில் உ.பி. யோதா அணி ஒரு வெற்றி, 2 தோல்வி 2 டிரா என 13 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது. இதனிடையே நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் ஹரியானா அணி 38-36  என்ற கணக்கில் குஜராத்தையும், பெங்களூர் அணி  40-29  என்ற கணக்கில்  புனேவையும் வீழ்த்தியது.

Categories

Tech |