Categories
அரசியல்

PRO KABADI 2022: இம்முறை கோப்பையை வெல்லப் போவது யார்…..? அதிகரிக்கும் எதிர்பார்ப்பு….!!!!!

பெங்களூருவில் ப்ரோ கபடி சீசன் 9 நேற்று தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் மொத்தம் 12 அணிகள் பங்கு கொள்கின்றனர். இந்த போட்டி டிசம்பர் மாதம் வரை நடைபெறும் நிலையில், ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி மற்றும் டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் நேரடியாக ஒளிபரப்பப்படும். இந்நிலையில் நேற்று நடைபெற்ற போட்டியில் தபாங் டெல்லி அணியினர் யு மும்பா அணியுடனும், பெங்களூரு புல்ஸ் அணியினர் தெலுங்கு டைட்டன்ஸ் அணியுடனும், ஜெய்ப்பூர் பிங்க் பந்தர்ஸ் அணியினர் உபி யோதா அணியுடனும் மோதினர்.

அதன் பிறகு இன்று நடைபெறும் போட்டியில் தமிழ்நாடு தலைவாசல் அணியினர் குஜராத் ஜெயின்ட்ஸ் அணியுடன் மோதுகிறது. கடந்த முறை சாம்பியன் பட்டத்தை தபாங் டெல்லி அணியினர் வெற்றி பெற்ற நிலையில், இம்முறை யார் கோப்பையை கைப்பற்றுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை நடைபெற்ற 8 ப்ரோ கபடி லீக்கில் பிரதீப் நர்வால் அதிகபட்சமாக 1318 ரெய்டு புள்ளிகளும், இவருக்கு அடுத்தபடியாக மணிந்தர் சிங் 993 ரெய்டு புள்ளிகளும் பெற்றுள்ளார்.

Categories

Tech |