Categories
மாநில செய்திகள்

சிறந்த நெசவாளர்களுக்கு பரிசுத் தொகை… அமைச்சர் O.S.மணியன்…!!

சிறந்த பட்டுகளை  வடிவமைக்கும் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார்.

சட்ட பேரவைக் கூட்டத் தொடரில் மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற  சட்ட பேரவைக் கூட்டத்த தொடரில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக் கோரிக்கை மீதான  விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பேசிய அமைச்சர் O.S.மணியன்  புதிதாக சில  அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்.

Image result for minister os manian

அதில்,மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மின்காந்த அசைவுடன் கூடிய கைத்தறி இயந்திரங்கள்  5,56,000 ரூபாய் மதிப்பில் உருவாக்கப்படும் என்று  தெரிவித்தார்.மேலும், பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளில் சிறந்த மற்றும் நவீன வடிவமைப்புகளை உருவாக்கும் முதல் மூன்று நெசவாளர்களுக்கு பரிசுத்  தொகையாக  ரூ5000, ரூ3000, ரூ2000 என வழங்கப்பட்டு வந்ததாகவும், தற்போது இந்த தொகை அளவை  உயர்த்தி ரூ10000, ரூ6000, ரூ4000 என்று வழங்க தமிழகஅரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என  அமைச்சர் O.S.மணியன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |