Categories
இந்திய சினிமா சினிமா

வீட்டிலும் முகக்கவசம் அணியும் பிரியா வாரியர்…. தினமும் ஆவி பிடிப்பதாக பேட்டி…!!!

கொரோனாவின் அச்சத்தால் வீட்டிலும் முக கவசம் அணிந்து தான் இருக்கிறேன் என்று நடிகை பிரியா வாரியர் கூறியுள்ளார்.

மலையாளத்தில் உருவான அடார் லவ் படத்தில் கண்ணடித்ததன் மூலம் பிரபலமானவர் பிரியா வாரியர். இதை தொடர்ந்து பிரியா வாரியர் தற்போது பல படங்களில் நடித்து பிஸியான நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது, “எனது குடும்பத்தில் அம்மா, அப்பா, பாட்டி, தம்பி என ஒன்றாக வாழ்ந்து வருகிறோம்.

ஆகையால் கொரோனா கட்டத்தில் நாங்கள் கவனமுடன் இருந்து வருகிறோம். அதேபோல் படப்பிடிப்பின் போதும் நான் தினமும் ஆவி பிடித்து வருகிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்தும் குடிக்கிறேன். மேலும் படப்பிடிப்பு முடிந்து வீட்டிற்கு வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு தனிமைப் படுத்திக் கொள்வேன். முக்கியமாக எனது தாத்தா பாட்டி அருகில் நான் சொல்ல மாட்டேன்.

வீட்டில் எங்கு சென்றாலும் முகக்கவசம் அணிந்து செல்வேன். எனக்கு சிறுவயதிலேயே நடிப்பின் மீது ஆர்வம் இருந்தது. அதன்பிறகு கண்ணடிக்கும் காட்சி மூலம் நான் பிரபலமாகியதும் படிப்பை பாதியில் விட்டு விட்டேன்.

ஆனால் எனது அம்மா என்னை எம்.பி.ஏ படிக்க சொல்லி வருகிறார். எனக்கோ தற்போது வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்பு தான் எனக்கு முக்கியம். ஆகையால் நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்துளர்கள் என்று அம்மாவை சமாதானப்படுத்தி வருகிறேன்” என்று கூறியுள்ளார்.

Categories

Tech |