Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

பிரியா ஸ்வீட்டி ஐடி…. பெண் போல் நாடகமாடி பாலியல் தொல்லை…. வாலிபருக்கு செக்….!!!!

கோவையில் குனியமுத்தூர் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் நியாஸ். 23 வயதுடைய இவர் தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெண் போல போலியான புகைப்படத்தை பதிவிட்டு பல்வேறு பெண்களிடம் நட்பு ஏற்படுத்தியுள்ளார். இதையடுத்து இவருடன் பழகிய திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவியுடன் பெண் குரலில் பேசி நட்புடன் பழகி உள்ளார்.

அந்தப் பழக்கத்தில் கல்லூரி மாணவியுடன் அவரது புகைப்படங்களை பெற்றுள்ளார். இதையடுத்து அந்த படங்களை மார்பிங் செய்து ஆபாச படமாக உருவாக்கி அதனை மீண்டும் கல்லூரி மாணவிக்கு அனுப்பி, நிர்வாணமாக வீடியோ கால் அழைப்பில் வர வேண்டும் இல்லை எனில் இந்த புகைப்படங்களை இணையதளத்தில் பரப்பி விடுவதாக மிரட்டியுள்ளார். இதையடுத்து கல்லூரி மாணவி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்தப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்து, அவரிடமிருந்த செல்போனை கைப்பற்றியுள்ளார். அவரது செல்போனை பார்த்த போது பல்வேறு இளம் பெண்களின் அரை நிர்வாணம், முழு நிர்வாண போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Categories

Tech |