மராட்டிய மாநிலம் புனே நகரில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 7 பேர் பலியாகி உள்ளனர்.
மராட்டிய மாநிலம் புனே நகரில் என்ற கொட்டாவடே படா பகுதியில் செயல்பட்டுவரும் நிறுவனத்தில் திடீரென தீ பிடித்தது. இதில் 37 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தீ விபத்து பற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக சென்று 20 பேரை மீட்டனர். அதன் 7 பேர் பலியாகிவிட்டனர். 10 பேரை காணவில்லை. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.