வெளிநாடுகளுக்கு செல்லும் மக்கள் தங்களது பாஸ்போர்ட் அரசு அலுவலகங்கள் தெரிவிக்கும் விதிகளுக்கு உட்பட்டுள்ளதா என உறுதி செய்து கொள்ளவேண்டும்.
பிரித்தானியா நாட்டில் உள்ள மக்கள் வெளிநாடுகளுக்குச் செல்லும்போது வெளியுறவு காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் போன்றவை அறிவுறுத்தும் விதிகளில் தங்களது பாஸ்போர்ட் உள்ளதா என்று சரி பார்த்துக் கொள்ளவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் இத்தாலி, ஸ்பெயின் மற்றும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளுக்குச் செல்லும்போது பிரித்தானியா மக்கள் தங்களது பாஸ்போர்ட்டில் போதுமான பக்கங்கள் இருக்கிறதா இல்லை வேண்டுமென்றால் புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனையடுத்து பாஸ்போர்ட்டுகள் பத்து வருடங்களுக்கு முன்பாக அளிக்கப்பட்டவை என்றாள் நல்லது என்று வெளியுறவு, காமன்வெல்த் மற்றும் மேம்பாட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து குறைந்த பட்சம் தங்களது பாஸ்போர்ட் 3 மாதங்களுக்காவது செல்லத்தக்க வகையில் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் பிரித்தானிய நாட்டு மக்கள் தங்களது பயணம் தொடர்பான விபரங்கள் குறித்து gov.uk என்ற வலைத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.