Categories
மாநில செய்திகள்

புழல் சிறையில் அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை!

புழல் சிறையில் அயனாவரம் சிறுமி வழக்கில் தண்டனை பெற்று வந்த கைதி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் கடந்த 2018ம் ஆண்டு அயனாவரம் அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத்திறனாளி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இவர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி குற்றவாளிகள் 17 பேரும் ஆயுள் தண்டனையை அனுபவித்து வந்தனர்.

இந்த நிலையில் குற்றவாளிகளில் ஒருவரான பழனி என்பவர் சிறை வளாகத்தில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அதனை பார்த்த சக கைதிகள் அளித்த தகவலின் பேரின் காவல்துறையின் அவரை மீட்டு ஸ்டான்லி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மன உளைச்சல் காரணமாக அவர் தற்கொலை செய்திருக்கலாம் என தகவல் வெளியாகிள்ளது.

Categories

Tech |