Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”கத்தி பட பாணியில் தப்பிய கைதி” தீரன் பட பாணியில் பிடித்த போலீஸ்…!!

கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரிய கைதியை தீரன் பட பாணியில் தமிழக போலீஸ் கைது செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

கத்தி படத்தில் விஜய் சிறையில் இருந்து தப்பிப்பது போல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் தப்பிய அவரை தமிழக போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் கைது செய்யப் படும் இலங்கை தமிழர்கள் , வங்கதேசத்தினர் , நைஜீரியர்கள் என 40க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இதில் போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நைஜீரியாவைச் சேர்ந்த 32 வயதான ஸ்டீபன் பால் அப்பூச்சியும் அடைக்கப்பட்டிருந்தார்.இவர் கடந்த ஜூலை 19ஆம் தேதி சிறப்பு முகாமில் இருந்து தப்பிச் சென்றார்.ஜூலை 19ஆம் தேதி இரவு சோதனை செய்த போலிசாருக்கு ஸ்டீபன் பால் சிறப்பு முகாமில் இல்லாதது தெரியவந்தது. இதையடுத்து சிறப்பு முகாம் வளாகத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் எதிலும் ஸ்டீபன் பால் உருவம் பதிவாகவில்லை. இதையடுத்து சிறைக்கு வெளியே உள்ள போக்குவரத்து போலீசாரின் சிசிடிவி களில் பதிவாகி உள்ளதா என பரிசோதித்தனர். அதிலும் ஸ்டீபன் பால் உருவம் பதிவாகவில்லை.

இதையடுத்து ஜூலை 19ஆம் தேதி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமிற்கு வந்த வாகனங்கள் குறித்து சோதனை செய்தனர். அதில் ஒரு தண்ணீர் லாரி வந்து சென்றது தெரிய வந்தது. விசாரணையில் தண்ணீர் லாரியில் தொங்கியபடி ஸ்டீபன் பால் தப்பித்துச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. கண்காணிப்பும் , பாதுகாப்பும் மிகுந்த மத்திய சிறை வளாகத்தில் இருந்து ஒரு கைதி தப்பி சென்றது எப்படி என்று என விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல் ராஜ் உத்தரவின் பேரில் தனிப்படையினர் ராஜஸ்தான் மும்பை என 57 நாட்கள் ஸ்டீபன் பால்_லை தேடி வந்தனர்.

தப்பிய ஸ்டீபன் பால் மீண்டும் போலி பாஸ்போர்ட் எடுத்து நைஜீரியாவுக்கு தப்பிச் செல்லும் நோக்கத்துடன் மும்பையில் தங்கி இருப்பதாக திருச்சி தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து தீரன் பட பாணியில் தமிழக போலீசார் மும்பை சென்றனர்.ஆனால் தனிப்படை  போலீசார் தனது இருப்பிடத்தை கண்டு பிடித்ததை அறிந்த ஸ்டீபன் பால் அங்கிருந்து தப்பிச்  டெல்லிக்கு சென்றார்.

ஆனாலும் சிறிதும் அசராத தனிப்படை போலீசார் டெல்லி விரைந்தனர். அங்கு ரகசிய இடத்தில் பதுங்கி இருந்த ஸ்டீபன் பால் திருச்சி தனிப்படை போலீசார் கைது செய்தனர். 57 நாட்களுக்கு முன் சிறையில் தப்பித்த குற்றவாளியின் புகைப்படத்தை மட்டுமே வைத்துக்கொண்டு நாடு முழுவதும் அலைந்து , திரிந்து கைதியை கைது செய்த திருச்சி தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Categories

Tech |