திவ்யபாரதி கடல்கன்னி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜி.வி.பிரகாஷ். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ”பேச்சுலர்”. இந்த படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திவ்யபாரதி. மாடலிங் துறையில் இருந்த இவர் 2015 ஆம் ஆண்டு அழகி பட்டத்தை வென்றார். சில விளம்பரங்களில் நடித்த இவருக்கு ‘பேச்சுலர்’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
மேலும், இளைஞர்களின் கனவு கன்னியாக வலம் வரும் இவர் அவ்வப்போது தனது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருவார். இந்நிலையில், தற்போது இவர் கடல்கன்னி போல் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் ரசிகர்களால் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.