இளவரசி மற்றும் சுத்தக்காரனுக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடைமையாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் கைதான சசிகலாவுடன் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோரும் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது 4 ஆண்டுகள் சிறை தண்டனைக்குப் பிறகு சசிகலா கடந்த 27ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து இளவரசி மற்றும் சுதாகரன் இருவரும் தற்போது விடுதலை செய்யப்பட்டனர். இதையடுத்து சசிகலா நாளை சென்னை வருகிறார்.
இந்நிலையில் சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு சொந்தமான 6 சொத்துக்கள் அரசுடமை ஆக்கப்பட்டது என்று சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தான் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.