Categories
உலக செய்திகள்

இளவரசி டயானாவுடன் பேசும் பேரன்…. வெளியான நெகிழ்ச்சி வீடியோ…!!!

பிரிட்டன் இளவரசர் ஹாரியின் மகன் ஆர்ச்சி, தன் பாட்டியான மறைந்த இளவரசி டயானாவின்  புகைப்படத்தை பார்த்து பேசும் வீடியோ நெட்பிலிக்ஸ் தொடரில் வெளியாகியிருக்கிறது.

நெட்பிலிக்ஸ் இணையதளத்தில் பிரிட்டன் இளவரசர் ஹாரி மற்றும் அவரின் மனைவி மேகனின் ஆவண தொடர் வெளிவந்துள்ளது. அதன் முதல் தொடரில் இளவரசர் ஹாரியின் மகனான ஆர்ச்சி தன் பாட்டியான, மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை பார்த்து பேசுவது இடம்பெற்றிருக்கிறது.

அதில் ஹாரியின் மனைவி மேகன், தன் குழந்தை ஆர்ச்சிக்கு மறைந்த இளவரசி டயானாவின் புகைப்படத்தை காண்பித்து, உன் பாட்டி என்று கூறி அறிமுகம் செய்கிறார். உடனே குழந்தை பாட்டியின் புகைப்படத்தை பார்த்து ஏதோ பேசுகிறது. அந்த வீடியோவின் பின்னணியில் இளவரசர் ஹாரி வாழ்க்கையில் தான் சந்தித்துக் கொண்டிருப்பதை விளக்குகிறார்.

Categories

Tech |