Categories
சினிமா தமிழ் சினிமா

“பிரின்ஸ் படத்தின் புதிய பாடல் வெளியீடு”….. என்னைக்கு தெரியுமா…? ப்ரோமோ மூலம் அறிவித்த படக்குழு….!!!!!

சிவகார்த்திகேயன் நடிக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் மூன்றாவது பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் எனக் படக்குழு அறிவித்துள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் நடித்துவரும் பிரின்ஸ் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளில் உருவாகி வருகின்றது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக உக்ரைன்  நாட்டைச் சேர்ந்த மரியா ரியோபோஷப்கா நடித்துள்ளார். இயக்குனர் அணுதீப் இயக்கத்தில் நடிகர்கள் சத்யராஜ், பிரேம்ஜி அமரன் போன்ற பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக திரையரங்குகளுக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி இத்திரைப்படம் வருகின்ற அக்டோபர் மாதம் 21ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அது என்னவென்றால், இந்த படத்தில் மூன்றாவது பாடலான நான் யாரு பாடல் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு ப்ரோமோ மூலம் அறிவித்துள்ளது.

Categories

Tech |