இளவரசர் வில்லியமும் கேட்டும் தனது பத்தாவது ஆண்டு திருமண வாழ்வில் அடி எடுத்து வைக்கின்றனர்.
பிரிட்டன் இளவரசர் பிலிப்பை இழந்து தவிக்கும் நிலையில் இளவரசர் வில்லியமும் அவரது மனைவி கேட்டும் தங்களின் பத்தாவது ஆண்டு திருமண வாழ்வில் அடியெடுத்து வைக்கின்றனர். இதனால் இளவரசர் வில்லியமும் கேட்டும் அதனை விமரிசையாக கொண்டாட முடிவு எடுத்துள்ளனர். இளவரசர் வில்லியமும் கேட்டும் 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.
இளவரசர் பிலிப் மற்றும் மகாராணியார் எலிசபெத்திற்கு பிறகு இளவரசர் வில்லியமும் கேட்டும் தான் ஆட்சி பீடத்தில் அமர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி வருகின்றது. இந்நிலையில் இளவரசர் வில்லியமும் கேட்டும் இடம்பெற்றுள்ள புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இளவரசி கேட் தனது கணவருடன் இருக்கும் போது சிரித்துக் கொண்டே இருப்பது அவருக்கு கூடுதல் அழகு சேர்த்துள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக சில புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.