Categories
உலக செய்திகள்

‘இளவரசர் ஹாரி, அவரது மனைவிக்கு வேலை வழங்கத் தயார்’ – கலாய்த்த அமெரிக்க உணவகம்

அரசு பதவிகளில் இருந்து விலகி தனித்து வாழ விரும்புவதாக இளவரசர் ஹாரி அண்மையில் அறிவித்த நிலையில், அவர்களுக்கு வேலை வழங்க விரும்புவதாக பர்கர் கிங் ட்விட்டரில் தெரிவித்துள்ளது

இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி மேகன் அரசுப் பதவிகளில் இருந்து விலகி, தனித்து வாழ விரும்புவதாக அண்மையில் அறிவித்தனர். அந்த அறிவிப்பை அடுத்து பிரபல உணவகமான பர்கர் கிங் ட்விட்டரில் கருத்துப் பதிவிட்டதற்கு விமர்சனங்கள் எழுந்துள்ளன.

அமெரிக்காவைத் தலைமையிடமாகக் கொண்ட பர்கர் கிங் என்ற உணவகம், இளவரசர் ஹாரி மற்றும் மேகன் அரச பதவியை துறக்காமல் வேலை தேடலாம் என்றும், அப்படி வேலை தேடும்பட்சத்தில் அவருக்காக புதிய மகுடம் ஒன்று தயாராக உள்ளது என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

மேலும் மற்றொரு ட்விட்டில், “இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி, அறிவித்ததை அடுத்து அவருக்கு பகுதிநேர வேலை வழங்க விரும்புவதாக” அதே உணவகம் தெரிவித்துள்ளது.

இதனால் ஆத்திரம் அடைந்த இணையவாசிகள், ட்விட்டரில் பர்கர் கிங் நிறுவனத்தை வசைபாடி வருகின்றனர். ஒருவர் ஹாரி நினைத்தால் ஒரே நாளில் உங்கள் நிறுவனத்தை வாங்கிவிட முடியும் என்றும் இன்னொருவர், இவ்வாறு பேசுவதால் தான் உங்கள் உணவக பிரெஞ்சு ஃப்ரைஸை (உருளைக்கிழக்கு சிப்ஸ் போன்ற உணவுப்பொருள்) விட மெக்டொனால்ட்ஸ் உணவகத்தின் பிரஞ்சு ஃப்ரைஸ் நன்றாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதற்கு முன்னர் டிம் ஹார்டன்ஸ் (Tim Hortons) என்ற கனடாவின் காபி நிறுவனம், ” ஹாரி மற்றும் மேகன் கனடாவிற்கு வந்தால் வாழ்நாள் முழுவதும் இலவச காபி வழங்குவதாகத் தெரிவித்தது” என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |