Categories
உலக செய்திகள்

இளவரசர் ஹரியை சீக்கிரம் விவாகரத்து பண்ணிருவாங்க..! மேகனின் அண்ணன் பகிர்ந்த விஷயம்… வெளியான பரபரப்பு தகவல்..!!

மேகனின் அண்ணன் இளவரசர் ஹரியை மேகன் கூடிய விரைவில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார்.

மேகன் மெர்க்கலின் அண்ணன் தாமஸ் மார்க்கல் ஜுனியர் (55), இளவரசர் ஹரியை மேகன் இன்னும் சிறிது நாட்களில் விவாகரத்து செய்து விடுவார் என்று கூறியுள்ளார். ஏற்கனவே மேகனின் முதல் திருமணம் இரண்டு வருடங்கள் மட்டுமே நீடித்தது என்று தாமஸ் கூறியுள்ளார். அதாவது Australia’s Big Brother VIP என்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தாமஸ் தனது சக போட்டியாளர்களிடம் இந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

அமெரிக்கத் திரைப்படத் தயாரிப்பாளரான Trevor Engelson-ஐ கடந்த 2011-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மேகன் மெர்க்கல் திருமணம் செய்துள்ளார். இதையடுத்து திருமணமாகி 23 மாதங்களே ஆன நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விவாகரத்து செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது. அதை போலவே மேகன் இளவரசர் ஹரியையும் சிறிது நாட்களில் விவாகரத்து செய்து விடுவார் என்று மேகனின் அண்ணன் தாமஸ் கூறியுள்ளார்.

Categories

Tech |