இளவரசர் ஹாரி மேகன் இருவரும் ஓபரா வின்ஃப்ரேக்கு பேட்டியளித்தது குறித்து அவர் கூறியுள்ளார்.
இளவரசர் ஹாரியும் மேகமும் ஓபரா வின்ஃப்ரேக்கு அளித்த பேட்டியில் தன் மகன் ஆர்ச்சி பிறக்கும் போது அவனது தோலின் நிறம் எப்படி இருக்கும் என ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்புவதாக மேகன் கூறியது எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என அவர் கூறியுள்ளார். மேலும் ஒரு கணம் தான் அதிர்ச்சியில் வாய்பிளந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த பெட்டியை தொடர்ந்து என்னை குறித்து பல மீம்கள் சமூக ஊடகங்களில் வெளியானது குறிப்பிடத்தக்கது. மேலும் பேட்டிக்கு முன் தான் ஹரியையும் மேகனையும் நேரில் சந்திக்கவில்லை. அவர்களுக்கு குறுஞ்செய்தி மட்டுமே அனுப்பியதாகவும் ஓபரா கூறியுள்ளார். அந்த குறுஞ்செய்தியில் முடிந்தவரை நாம் உண்மைகளை கூறவேண்டும் என்றே அவர்களிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார்.
மேலும் ஹரி மேகன் உடனான அந்த பேட்டி மிகுந்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன்பின் இளவரசர் பிலிப் உடல்நலமின்றி மருத்துவமனையில் இருந்தபோது வெளியான அந்த பேட்டியால் ராஜ குடும்பத்தினருக்கு இடையே பிளவு ஏற்பட்டது. மேலும் ஹரி தனது தாத்தாவின் இறுதி சடங்கிற்கு வந்த போதும் அந்தப் பிரச்சனை சரியானதாக தெரியவில்லை என ஓபரா கூறியுள்ளார்.