Categories
அரசியல் தேசிய செய்திகள்

“ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி” தொண்டர்களிடையே பிரதமர் பேச்சு…!!

தேர்தல் வெற்றிக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி தேர்தல் பனி செய்துள்ளதாக பிரதமர் மோடி வாரணாசியில் தொண்டர்களிடம் பேசியுள்ளார்.

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று வருகின்ற 30_ஆம் தேதி ஆட்சி பொறுப்பை ஏற்க இருக்கின்றது. மீண்டும் இரண்டாவது முறையாக மோடி பிரதமராக தனது பதவியை தொடர்கிறார். பிரதமர் மோடி உத்தரப் பிரதேச மாநிலத்தின் வாராணாசி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு சுமார் 4.80 லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் தனக்கு வாக்களித்து வெற்றி பெற செய்த வாக்காளர்களுக்கு  நன்றி தெரிவிக்க  பிரதமர் மோடி இன்று வாரணாசி வந்தார்.அவரை உத்தரபிரதேச மாநில கவர்னர் ராம் நாயக், மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பாஜகவின் தேசிய தலைவர் அமித் ஷா ஆகியோர் வரவேற்றனர். பின்னர் வாரணாசியின் முக்கிய வீதிகளில் வழிநெடுக நின்ற தொண்டர் பிரதமர் மோடியை மலர் தூவி வரவேற்றனர்.

பின்னர்  அங்கிருந்த பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி
தேர்தலில் பாஜக அடைந்துள்ள வெற்றியை  நான் தொண்டர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். தேர்தலுக்காக ஒவ்வொரு வீட்டிலும் ஒரு மோடி பணியாற்றி இருக்கிறார். வாரணாசி மக்கள் மீது நான் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். மக்களின் ஆசிர்வாதம் எனக்கு இருந்தது. தொண்டர்களின் பலத்தால் தான் நமக்கு இவ்வளவு பெரிய வெற்றி சாத்தியமானது.தேர்தலின் வெற்றிக்கு உழைத்த கட்சியினர் , தொண்டர்களுக்கு நன்றி என்று மோடி பேசினார்.

Categories

Tech |