Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை!

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா பாதிப்புகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா பரவாமல் கட்டுப்படுத்துவது, மருத்துவ வசதி அதிகரிப்பு உள்ளிட்டவை குறித்து பிரதமர் மோடி ஆலோனை நடத்தி வருகின்றார். இந்த ஆலோசனையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொளி மூலம் தமிழக முதல்வர் பழனிசாமி  பங்கேற்றுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1965 ஆக உயர்ந்துள்ளது. இதில், 151 பேர் குணமடைந்துள்ள நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதிகபட்ச பாதிப்பாக மகாராஷ்டிராவில் 335 பேருக்கும், கேரளாவில் 265 பேருக்கும், தமிழகத்தில் 234 பேருக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Categories

Tech |