உணவுப் பொருட்களின் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமையாக கூறி உள்ளார்.
10 வருடங்களுக்கு ஒருமுறை ‘சர்வதேச உருளைக்கிழங்கு மாநாடு’ நடத்தப்படும். இதில் உருளைக்கிழங்கு விளைச்சல் குறித்த ஆய்வு, அதில் உள்ள சவால்கள், தீர்வுகள் குறித்து விவாதிக்கப்படும். கடைசியாக 2010 ஆம் ஆண்டு இந்த மாநாடு நடத்தப்பட்டது.
இந்தநிலையில் நடப்பு ஆண்டுக்கான 3 நாட்கள் மாநாடு குஜராத் மாநிலத்தின் காந்தி நகரில் தொடங்கியுள்ளது. இந்தமாநாட்டில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பேசினார். அப்போது பேசியதாவது, விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் அரசாங்கத்தின் கொள்கை காரணமாக உணவுப் பொருள் உற்பத்தியில் முதல் 3 நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது.
2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளுடைய வருமானத்தை இரட்டிப்பாக்க முயற்சி எடுக்கப்படும் என்றார். மேலும், ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக அறுவடை என்ற குறிக்கோளுடன் விவசாயிகள் அனைவரும் சாகுபடி பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.